திருக்குறள்:
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
விளக்கம் :
அறிவுள்ளவர்களுடன்
கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும்,
அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர்
தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.
பழமொழி :
Politeness is the flower of humanity.
நற்பண்புகள் மனித இனத்தின் மலர்கள்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.
2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.
பொன்மொழி :
அடித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை கருவியாகும் – ஜோசப் அடிசன்
பொது அறிவு :
01.இந்தியாவில் வெளியான முதல் பத்திரிக்கை எது?
பெங்கால் கெஜட் The Bengal Gazette
English words & Tips :
Grammar Tips
அறிவியல் களஞ்சியம் :
பூமியிலிருந்து
மிக தொலைவில் உள்ள நட்சத்திரத்தின் புகைப்படம் நாசாவின் ஜேம்ஸ் வெப்
தொலைநோக்கியால் எடுக்கப்பட்டது. இந்த நட்சத்திரம் 1290 கோடி ஒளி ஆண்டுகள்
தொலைவில் உள்ளது.
ஜூன் 16
சித்தரஞ்சன் தாஸ் அவர்களின் நினைவுநாள்
தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் (வங்காள மொழி:চিত্তরঞ্জন দাস) (நவம்பர் 5, 1870 -ஜூன் 16, 1925) இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர்.
தேசபந்து சித்தரஞ்சன்
தாஸ் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப்
போராட்டத் தலைவர். 1917- ஆம் ஆண்டிலிருந்து 1925- ஆம் ஆண்டு வரை தீவிர
அரசியலில் ஈடுபட்டவர். இவர் பூபன் மோகன் தாஸ் என்பவருக்குப்
பிறந்தார். இங்கிலாந்தில் சட்டக் கல்வி கல்வி கற்றவர், 1909இல் அலிப்பூர்
குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார்.
இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு.
அவரது
அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில்
முக்கியமான நபராக உயர்ந்தார்.அவர் கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை
வளர்க்க விரும்பினார். சுய ராஜ்ஜியக் கட்சித் தலைவர். சாதி வேற்றுமையையும்
தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர்.
புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது
தொழிலைத் தியாகம் செய்தவர்.
நீதிக்கதை
காலத்தின் அருமையை அறிவோம்
விஜயபுரி என்ற நாட்டை விவேகவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் அரசவையில் நன்கு கற்றிருந்த அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்.
அரசன் ஒரு நாள் அந்த அறிஞர்களை பார்த்து, “அறிஞர் பெருமக்களே வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் எது?” என்று கேட்டான்.
இந்த
கேள்வியை கேட்டதும், முதல் அறிஞர், “வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த
பொருள் உயிர்தான். உயிரில்லை என்றால் நம் வாழ்க்கையில் ஒன்றும் அனுபவிக்க
முடியாது” என்றான்.
இரண்டாவது
அறிஞர், “மன்னா, வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது அறிவுதான்.
அறிவில்லாமல் ஒருவரும் வாழ முடியாது” என்று பதிலளித்தார்.
மூன்றாவது
அறிஞர் எழுந்து, “அரசே, வாழ்க்கையில் பொறுமை இன்றி நாம் ஒருகணம் கூட வாழ
முடியாது. எனவே மிகவும் விலை உயர்ந்தது பொறுமை தான்” என்று பதில்
அளித்தார்.
நான்காவது
அறிஞர், “அரசே, நம்ம பூமிக்கு வேண்டியஆற்றல் சூரியனிடமிருந்து தான்
கிடைக்கிறது. சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிர்கள் கிடையாது. எனவே
சூரியன்தான் உயர்ந்தது” என்றான்.
ஐந்தாவது
அறிஞர், “வாழ்க்கையில் அனைத்தும் இருந்து அன்பு இல்லாவிட்டால் மனிதன்
வாழ்ந்து ஒரு பயணும் இல்லை. எனவே அன்பு தான் மிக மதிப்பு வாய்ந்தது”
என்றார்.
இறுதியாக
ஓர் அறிஞர் எழுந்து, “அரசே, காலம் தான் அனைத்தையும் விட மிக மிக மதிப்பு
வாய்ந்த பொருள். நமக்கு காலம் இல்லையானால் உயிர் இருந்து என்ன பயன்?. அறிவை
பயன்படுத்த நமக்கு நேரம் எது?. பொறுமையாக இருக்க ஏது அவகாசம். சூரியனை
பயன்படுத்த ஏது காலம்?. அன்பு காட்டை ஏது வாய்ப்பு? எனவே உலகிலேயே மிகவும்
மதிப்பு வாய்ந்த பொருள் காலம்தான்”.
அரசர்
அந்த ஆறாவது அறிஞர் கூறிய கருத்துதான் சிறந்தது என்று பாராட்டி அந்த
கருத்தை ஏற்றுக் கொண்டார். காலத்தின் அருமையை குறித்து மிகவும் அழகாக
விளக்கிய ஆறாவது அறிஞருக்கு அவர் மனம் விரும்பும் வகையில் எண்ணற்ற பரிசுகளை
கொடுத்து பாராட்டினார்.
அது மட்டுமல்ல அவரை தனது அமைச்சராக நியமித்து கௌரவப்படுத்தினார். மற்ற ஐந்து அறிஞர்களும் அரசரின் செயலை பாராட்டினார்.
இன்றைய செய்திகள்
ஆய்வு. ஏர் இந்தியா நிறுவனம் வைத்திருக்கும் போயிங் 787 8/9 ஏக விமானங்களை
ஆய்வு செய்ய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு.
Today’s Headlines
Tamilnadu Chief Minister M.K. Stalin provided a house and a laptop to a
tribal student who qualified for higher education at IIT
Boeing 787 aircraft inspection. The Directorate General of Civil
Aviation has ordered an inspection of the Boeing 787 8/9 aircraft owned
by Air India.