விஜயுடன் ஆசிரியர் சங்கத்தினர் சந்திப்பு – தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் தீர்மானம்!!
விஜயுடன் ஆசிரியர் சங்கத்தினர் சந்திப்பு – கடும் அதிர்ச்சியில் தி.மு.க. தலைமை – நாளிதழ் செய்தி
தமிழ்நாடு
உயர்நிலை – மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள், த.வெ.க.,
தலைவர் விஜயை சந்தித்து, தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டது, தி.மு.க.,
தலைமையை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஓட்டு வங்கி பறிபோய் விடுமோ
என்ற கவலையில் அக்கட்சியினர் இருப்பதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க., ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், அனைத்து போராட்டத்திற்கும் ஆதரவு
தெரிவித்தார். ‘தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அனைத்து கோரிக்கைகளும்
நிறைவேற்றப்படும்’ என, உறுதி அளித்தார்.
தி.மு.க.,
தேர்தல் அறிக்கையிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய
ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்பது உட்பட, பல்வேறு வாக்குறுதிகள்
அளிக்கப்பட்டன.
இதையடுத்து,
கடந்த சட்டசபை தேர்தலில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிக
அளவில் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளித்தனர். தி.மு.க., வெற்றி பெற்றது.
ஆனால்,
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகள், ஆட்சிக்கு வந்து
நான்காண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை. இது, அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களிடம், அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில்,
தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் நிறுவனத் தலைவர்
மாயவன், மாநிலத் தலைவர் ஜெயகுமார் மற்றும் நிர்வாகிகள், கடந்த 13ம் தேதி
த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்தனர்.
அப்போது,
‘கடந்த நான்கு ஆண்டுகளில், முதல்வரை எட்டு முறை நேரில் சந்தித்தோம்.
ஒவ்வொரு முறையும் அதே கோரிக்கையை திரும்ப திரும்ப சொன்னோம். அவரும்
கேட்டார். புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
‘போய்
வாருங்கள் என்றார். மறுநாள், முதல்வருடன் எடுத்த புகைப்படங்கள்
நாளிதழ்களில் வரும். ஆனால், கோரிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்படவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் தான், உங்களை சந்திக்கிறோம். உங்களின் ஆதரவை
நாடுகிறோம்’ என தெரிவித்தனர்.
ஒன்பது கோரிக்கை:
அதை
கேட்ட விஜய், ‘உங்களுக்கு என்னுடைய ஆதரவு உண்டு’ என சொல்லி அனுப்பினார்.
இந்த தகவல் தான், தி.மு.க., தலைமையை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி
இருக்கிறது.
‘அரசு
ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆதரவு எப்போதும் தங்களுக்கு தான்’ என, தி.மு.க.,
நினைத்திருந்த நிலையில், ஆசிரியர் சங்கத்தினர், விஜயை சந்தித்து பேசியதால்,
தங்கள் ஓட்டு வங்கி பாதிக்கப்படுமோ என, அச்சம் அடைந்தனர்.
அதைத்
தொடர்ந்து, மற்ற சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, ‘விரைவில் உங்கள்
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என, அரசு தரப்பில் உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில், ஜாக்டோ – ஜியோ அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட
அறிக்கை:
விஜயை
ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சந்திக்கவில்லை. ஜாக்டோ – ஜியோ
தொடர்ந்து பேச்சு நடத்தியும், பல்வேறு கட்ட போராட்ட நடவடிக்கையில்
ஈடுபட்டதாலும், அரசிடம் இருந்து சரண்டர், மகப்பேறு விடுப்பு என, ஒன்பது
கோரிக்கைகளை பெற்றுள்ளோம்.
பழைய
ஓய்வூதிய திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை, செப்., 30க்குள்
பெறப்படும் என, அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. எனவே, அரசிடம் இருந்து நல்ல
முடிவுகள் வரும் என எதிர்பார்த்து, தற்காலிகமாக இயக்க நடவடிக்கைகளை ஒத்தி
வைத்துள்ளோம்.
ஜாக்டோ
– ஜியோ பேரமைப்பு, பல்வேறு சங்கங்கள் கொண்ட கூட்டமைப்பு. இதில்
பங்கேற்றுள்ள சங்கங்களின் மாநில அமைப்புகள், தங்கள் முடிவுகளுக்கு ஏற்ப
தனித்துவமாக செயல்படுவது, அவர்களின் தனிப்பட்ட முடிவாகும். அதற்கும்,
ஜாக்டோ – ஜியோவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
நம்பிக்கை:
அரசை
சமாதானப்படுத்துவதற்காக, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது, அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது
குறித்து, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர்
கூறுகையில், ‘குறிப்பிட்ட சங்க நிர்வாகிகள் விஜயை சந்தித்தது, தி.மு.க.,வை
அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
‘அதனால்,
அந்த சந்திப்புக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என, ஜாக்டோ – ஜியோ
வெளியிட்ட அறிக்கையை, சாதகமாக பரப்பி வருகின்றனர். விஜய் உடனான
சந்திப்பால், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு
வந்துள்ளது’ என்றனர்.