-->

Ticker

6/recent/ticker-posts

புரெவி புயல் எச்சரிக்கை: குமரி கடல் நோக்கி வருவதால் நாளை பலத்த மழை எச்சரிக்கை!

 புரெவி புயல் எச்சரிக்கை: குமரி கடல் நோக்கி வருவதால் நாளை பலத்த மழை எச்சரிக்கை!



தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் புரெவி புயல் நாளை குமரி கடல் பகுதியை அடையும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்யக்கூடும். இந்நிலையில் புரவி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிலை குறித்து தமிழக முதல்வரிடம் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று பேசினார். மாநிலங்களுக்கு தேவைப்படும் உதவிகளை இயன்ற அளவுக்கு செய்வதாக அப்போது உறுதி அளித்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.செவ்வாய்க்கிழமை அன்று தென்மேற்கு மற்றும் அதன் ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை இரவு புயலாக வலுவடைந்தது. இதற்கு புரவி என பெயர் சூட்டப்பட்டது.

இந்தப் புயல் இன்று பாம்பனுக்கு கிழக்கு -தென் கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு-வடக்கே சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு 7 மணியளவில் இலங்கையைக் கடந்து மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதி நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த செய்தியை படிங்க : 3.5 லட்சம் பெண்களுக்கு நாட்டுக்கோழி,வெள்ளாடு வழங்கப்படும்: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

 புரெவி புயல் live location click : https://www.accuweather.com/en/hurricane/indian

இதன் காரணமாக இன்று ராமநாதபுரம்,தூத்துக்குடி, கன்னியாகுமரி ,திருநெல்வேலி, தென்காசி சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலும் கூடிய அதிக.விழுப்புரம் ,கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ,புதுக்கோட்டை, புதுச்சேரி, திருவாரூர், காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும்.செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை. ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளனர்.நாளை வியாழக்கிழமை அன்று சிவகங்கை ,திருநெல்வேலி, தென்காசி ,தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்கள், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை தேனி, திண்டுக்கல் ,விருதுநகர், மதுரை ,மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்தப் பிறவி புயலால் இன்று ராமநாதபுரம் ,திருநெல்வேலி, தூத்துக்குடி ,கன்னியாகுமரி, மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று இன்று மாலை முதல் நாளை காலை வரை ராமநாதபுரம், திருநெல்வேலி ,தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில பகுதியில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூண்டி நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 2 சென்டிமீட்டர் மழை பெய்யுள்ளது. தென்கிழக்கு வங்க கடல் குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர் இப்பகுதி செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வர மீனவ குடும்பங்கள் இடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments